மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும்
2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது
ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது.
கடந்த மூன்று மாதங்களாக தேசிய ஆளும் கூட்டணிக்குள் நெருக்கடிகள் தீவிரமடைந்து வந்த நிலையில் ஜனாதிபதி பிரதமர் முன்னாள் ஜனாதிபதி மூவரும் இந்தியாவின் ஆதரவை பெறுவதற்காக புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இறுதியாக ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இந்தியா வந்திருந்தார் சிறிசேன ரோ குறித்த சர்ச்சை வெடித்திருந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
சிறிசேன பிம்ஸ்டெக் மாநாட்டின் போது இந்திய பிரதமரை சந்தித்தார்.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு செப்டம்பரில் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் அவர் மோடியை முதல்தடவையாக செப்டம்பரிலேயே சந்தித்திருந்தார்.
இலங்கைக்கான தனது இரு விஜயத்தின் போதும் மோடி மகிந்த ராஜபக்சவை சந்திப்பதற்காக நேரத்தை ஒதுக்கியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச இலங்கையை எப்படி சீனாவின் சொத்தாக மாற்றிவிட்டார் என்பதை கருத்தில்கொள்ளும்போது இது ஆச்சரியமான விடயம்.
ராஜபக்ச மோடியை சந்திப்பதற்கு முன்னர் இந்தியாவுடன் உறவுகளை புதுப்பிப்பதற்காக தனது முன்னாள் வெளிவிவகார அமைச்சரை புதுடில்லிக்கு அனுப்பியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச வருகையால் சீனா உற்சாகமடைவதற்கு எப்படி காரணங்கள் உள்ளதோ அதேபோன்று இந்தியா கவலையடைவதற்கான காரணங்களும் உள்ளன.
ராஜபக்ச காலத்திலேயே தென்னாசியாவில் இந்தியாவின் செல்வாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றியது.
இலங்கையின் அரசியல் கருத்தாடல்களில் கடந்தகாலத்தின் இந்திய எதிர்ப்பு உணர்வு கடந்த வாரம் மீள திரும்பியிருந்தது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் கையளிக்கப்போவதில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
திருகோணமலை எண்ணெய் குதம்,பலாலி விமான நிலைய அபிவிருத்தி உட்பட பல அபிவிருத்தி திட்டங்களை இந்தியா பெறவுள்ளது
இலங்கையின் வடபகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தை சீனா நிறுவனங்களிடமிருந்து இந்திய நிறுவனங்கள் பெற்றிருந்தன.
இது வழமைக்கு மாறான வெற்றியாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகைக்கு வழங்குவதற்கு காரணமாகவிருந்த சிறிசேன தற்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையை எந்த நாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்
இலங்கையை பொறுத்தவரை இந்தியாவிற்கு வலுவான பாதுகாப்பு கரிசனைகள் நலன்கள் உள்ளன இதன் காரணமாக மோடி அரசாங்கம் இலங்கையில் சீனாவின் வலுவான பிரசன்னத்தை விரும்பாது.
குறிப்பாக மாலைதீவின் அனுபவத்தினை இந்தியா கருத்தில்கொண்டிருக்கும்.
தமிழில்- வீரகேசரி இணையம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM