நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராய விசேட பாராளுமன்ற அமர்கள் திங்கட்கிழமை கூடவுள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய சற்றுமுன்னர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.நேற்று மாலை நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பாராத அரசியல் நிலைமை தொடர்பில் சபாநாயகர் கூர்ந்து அவதானித்துவருவதாகவும் இவ்வாறான நிலைமையில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட ஆலோசனைகளை நேற்று இரவு சபாநாயகர் பெற்றுக்கொண்டதாகவும், தனது சுயாதீனமான தீர்மானத்தை இன்று அறிவிக்கவுள்ளதாகவும்  சபாநாயகர் தெரிவித்துள்ளார்.