சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் ஒரு தொகை தங்க ஆபரணங்களை  கடத்திவர முற்பட்ட நபர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து  கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இலங்கை விமான நிலையத்தில் பணிபுரிபவர் என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் இன்று காலை மதுரையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்த  குறித்த நபரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரின் பயண பொதியை சோதனையிட்ட போது மறைத்து வைத்திருந்த ஒரு தொகை தங்க ஆபரணங்களை கைப்பற்றியுள்ளனர்.

சுமார் 2கோடியே 29 இலட்த்து 94 ஆயிரத்து 365 ரூபா பெறுமதியான 4 கிலோ கிராம் நிறைகொண்ட ஒரு தொகை தங்க ஆபரணங்களை குறித்த நபரிடமிருந்து சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவரை  மேலதிக விசாரணைகளுக்குட்படுத்தியுள்ளதாக  விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.