நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த 3 முக்கிய கட்சிகள் முக்கிய பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய சிறுபான்மைக் கட்சிகள் இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டுள்ளன.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை அடுத்து எவ்வாறு முங்கொடுப்பது தொடர்பான பேச்சில் 3 கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 5 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் 7 உறுப்பினர்களும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் 6 உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இந் நிலையில் அமைச்சர் மனோகணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.