மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர்.அந்த எதிர்பார்ப்பை தற்போது நிறைவேற்றியுள்ளோம். ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று மாலை பிரதமராக பதவியேற்றுள்ளார்.

எனினும் அமைச்சரவை பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை.

அது பற்றி பின்னர் அறிவிப்போம்.

இரு தலைவர்களும் இணைந்தமைக்கு நாம் எவ்விதமான டீல்களையும் மேற்கொள்ளவில்லை. 

ஆனால் மக்களின் எதிர்பார்ப்பையே நிறைவேற்றிள்ளோம். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தால் நாட்டில் எதுவும் மிஞ்சாது. ஆகையினாலேயே இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.