(இராஜதுரை ஹஷான்)

பெருந்தோட்ட மக்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்காவிடின் தீக்குளிப்பேன் என்று பாராளுமன்றத்திற்கு பெற்றோல் கொள்கலனுடன் வந்தவரும்,கூட்டுவொப்பந்தத்தில் உரிய தீர்வு கிடைக்கப் பெறாவிடின்  பதவி விலகுவேன்   என்று கடந்த காலங்களில் குறிப்பிட்டவர்களும்  இன்றும் மலையக மக்களினை வைத்தே அரசியல் செய்கின்றனர்.என தெரிவித்த கூட்டு எதிரணியினர்.

மலையக மக்களுக்கு  1000 ரூபா நாள் சம்பளத்தினை வழங்காவிடின் தான் பதவி விலகுவதாக மலையக உட்கட்டமைப்பு அபிவிருத்தியமைச்சர் பழனி திகாம்பரம் குறிப்பிட்டுள்ளார்.  

சம்பள பிரச்சினைக்கு அரசாங்கம் நேரடியாக தலையிட வேண்டும். தமது கோரிக்கை தோல்வியடைந்தால் அமைச்சர் பழனி திகாம்பரம்  வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்களிப்பாரா  எனவும் கேள்வி எழுப்பினர்.

பொதுஜன பெரமுனவின் தலைமை  காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற  செய்தியாளர் சந்திப்பில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டது.