படிக்கவில்லை என்ற காரணத்திற்காக 6 வயதுச் சிறுவனை மாமனார் தாக்கியமையால் பாதிக்கப்பட்ட சிறுவன் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

குறித்த சம்பவத்தில் கிரிசுட்டகுளம் , கனகராயன்குளம்  பகுதியை சேர்ந்த 6 வயதுச் சிறுவனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் அற்ற நிலையில் குறித்த சிறுவனை மாமனே கவனித்து வந்துள்ளார்.

வீட்டில் கல்வி கற்கவில்லை என்கின்ற காரணத்தினால் வயரினால் தாக்கியுள்ளார். இதன் காரணமாக குறித்த சிறுவனின் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டாதல் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில்  கனகராயன்குளம் பொலிஸார் மற்றும் மாவட்ட சிறுவர் நன்நடத்தை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.