(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
"கம்பனிகளின் பிரச்சினையை பெருந்தோட்ட மக்களின் மீது சுமத்த முற்படக்கூடாது, சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் தெரிவி்த்தார்.
அரச கடன் பெறுகைக்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
"மலையக மக்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாகக்கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானதாகும்.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு அதிக வருமானம் கிடைப்பது தேயிலையிலாகும். அப்படியான பாரிய பணியை மேற்கொண்டுவரும் அந்த மக்கள் பெறும் ஊதியத்தில் அன்றாட வாழ்க்கையைக்கூட கொண்டு நடத்த முடியாமல் இருக்கிக்கின்றர்.
அத்துடன் அந்த மக்கள் 1000 ரூபா கோரி ஆர்ப்பாட்டாம் செய்தாலும் அவர்களுக்கு 500ரூபாவே அடிப்படைச்சம்பளமாக வழங்கப்படுகின்றது. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
அந்த மக்களை திருப்திப்படுத்தாமல் அவர்களிடமிருந்து பூரண பயனை அரசாங்கம் எதிர்பார்க்க முடியாது. அரசாங்கம் இன்று வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வழி தேடி வருகின்றது. ஆனால் நாட்டின் தேசிய வருமானத்துக்கு பெரும் சக்தியாக இருக்கும் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காமல் இருப்பது நியாயமில்லை." என தெரிவித்தார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM