கொட்டாவ - மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கி ஒன்றில் இனந்தெரியாத மூவர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இன்ற நண்பகல் மோட்டார் காரில் வந்த இனந்தெரியாத மூவரே துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் மற்றும் நகைகளின் பெறுமதி இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இக் கொள்ளைச் சம்பவம் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வங்கியின் சி.சி.டீவி காணொளிகளை பரிசோதித்து வருவதோடு தீவிர விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர்.