சுமார் 270 மகளீர் பங்கு கொள்ளும் உலகின் பாரிய 'ரெயிட் அமேசனஸ்' சாகசம் கொண்ட சவால்; நிகழ்வு கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வருகினறது.
ஆறு நாட்களுக்கும் மேற்பட்ட காலப்பகுதியினில் இடம்பெறும் இந் நிகழ்வின் போது 35 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தினை மேற்கொள்வதுடன், 65 கிலோ மீட்டர் துவிச்சக்கர வண்டி சவாரி மற்றும் 15 கிலோ மீட்டர் தூர சிறிய ரக படகு ஓட்டம் என்பனவுடன், அம்பு வில்லாண்மை என்ற போட்டிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த வகையிலான சர்வதேச நிகழ்வொன்றை இலங்கை ஏற்பாடு செய்துள்ளமை குறித்து இலங்கை பெருமிதம் கொள்வதுடன் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு மிகவும் அவசியாமான தேவைப்பாட்டினை இது நிறைவு செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உள்ளூர் வாசிகள் கூட விஜயம் செய்யப்படாத தொப்பிகலை போன்ற பிரதேசங்கள் குறித்து அதிக அளவிலான வெளிப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுதேஷ் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலாக 'ரெயிட் அமேசனஸ்' நிகழ்வின் மூலம் அச்சு தொலைக்காட்சி வானொலி இணைய தளம் மற்றும் சமூக வலை தளம் போன்றவற்றின் ஊடாக இலங்கை சுற்றுலாத் தலம் குறித்து பாரிய வெளிப்பாடுகள் ஏற்பட்டன.
இந்த சர்வதேச ஊடக தொடர்பாடல் நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தக வாய்ப்புக்கள் கிட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாறுபட்ட நிகழ்வின் மூலம் இலங்கையின் தொன்மை மற்றும் சூழல் நட்பு போன்ற விடயங்கள் சர்வதேச சமூகத்திற்கு சிறந்த முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் எதிர்காலத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், தங்கள் பயண திட்டத்தில் உயர் மட்ட சுற்றுலாத்துறை மையமாக இலங்கையினை அடையாளம் இட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தப்படாத இலங்கை சுற்றுலா துறை அம்சங்களை இந்த நிகழ்வு வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM