பரந்தன் இந்து மகா வித்தியாலய மாணவி ஸ்ரீகாந்தன் யதுர்ஷனா 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை தமிழ் தினப் போட்டி பிரிவு இரண்டில் எழுத்தாக்கத்தில் முதலாமிடத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இவருக்கான விருது வழங்கும் நிகழ்வு நாளை சனிக்கிழமை மாத்தளை இந்து தேசிய கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் விருது வழங்கல் நிகழ்வின் போது வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.