(நா.தினுஷா)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே புதிய இழப்பீட்டு சட்டமூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சி மாற்றத்தை மையமாக கொண்டு சிங்கள சமூகத்தினரிடையே பிரிவினைவாதத்தை உருவாக்கும் கூட்டு எதிரணியினரின் முயற்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபோர் ரஹ்மான் தெரிவித்தார். 

இழப்பீட்டு சட்டமூலம் கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போது கூட்டு எதிரணியினர் குறித்த சட்டமூலம் மீது பாரிய எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். இது குறித்து விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகதமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது.