ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரி காவத்தை நகரில் தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள் ஒன்யிணைந்து இன்று காலை காவத்தை நகரின் மணிக்கூட்டு கோபுரத்தின் அருகாமையில் காவத்தை பிரதான வீதி வழிமறைத்து மாபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவத்தை யாயின்ன சந்தியிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள் பாதயாத்திரை மூலம் காவத்தை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக ஒன்யிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆப்பாட்டத்தில் காவத்தை பிரதேசத்தை அண்மித்த அவுப்பை, எந்தான, சமரகந்த, ஓப்பாத்த, வெள்ளந்துர, கலலெல்ல, நீலகாமம், பொரோணுவ, ரில்லேன, உனுவல, உட்பட மேலும் பல தோட்டங்களை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், வர்த்தகர்கள், இளைஞர், யுவதிகள், சமூக சேவையாளர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

“முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளிடம் வேலையை மட்டும் வாங்காதே? தோட்டத் தொழிலாளர்களையும் கண் விழித்துப்பார். தோட்ட மக்களை காலால் மிதிகாதே? உடனடியான தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்கு? என்று பல்வேறு கோஷங்ளையும் எழுப்பி பதாதைகளையும் கருப்பு கொடிகளையும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி ஆர்ப்பாட்டம் காரணமாக காவத்தை நகரில் பல மணி நேரம் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.