மூக்கின் இயல்பான ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க புதிய உறை அறிமுகமாகியுள்ளது.

பனிக்காலம், குளிர்காலம் வந்துவிட்டால் எம்மில் பலர் கையில் எப்போதும் இன்ஹேலருடன் பயணிப்பதைக் காணலாம். சிலர் கைகளில் எப்போதும் கைகுட்டையையோ அல்லது டிஸ்யூ பேப்பரையோ வைத்திருப்பார்கள்.

மூக்கில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனே அதைக் கொண்டு நிவாரணம் தேடுவார்கள். அதே போல் வேறு சிலர் இந்த பருவகாலத்தின் போது குளிர்சாதன வசதியுள்ள பஸ், வாகனம் போன்றவற்றில் பயணிப்பதை தவிர்ப்பர். மீறி பயணித்தால் மூக்கை உறிஞ்சிக் கொண்டே வருவர். ஏனெனில் இத்தகைய மாறுபட்ட சீதோஷ்ண நிலையால் மூக்கு பாதிக்கப்படும். தற்போது இதனை பாதுகாக்க மூக்கில் ஒரு வகையினதான உறையை அணிந்து கொள்கிறார்கள் மேலைத்தேய நாட்டினர்.

2008 ஆம் ஆண்டில் அறிமுகமாகி, தற்போது பிரபலமாகியிருக்கும் இந்த பாதுகாப்பு உறை கம்பளி நூலால் தயாரிக்கப்படுகிறது. விதவிதமான வண்ணங்களிலும், விதவிதமான வடிவமைப்பிலும் இவை கிடைக்கின்றன.

இணையதள சந்தையிலும் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தி, பருவ காலம் மாறினாலும் மூக்கின் இயல்பான ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பாதுகாக்க இயலும். நோஸ்வார்மர் எனப்படும் இந்த மூக்கு பாதுகாப்பு உறையை வாங்கி, சளிதொல்லை மற்றும் குளிர்கால காய்ச்சலிருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.