(மனோ சித்ரா)

கூட்டு ஒப்பந்தம் முடியும் வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 600 ரூபாவையும் இடைக்கால கொடுப்பனவாக 100 ரூபாவையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொழில் அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனினும் பிரதமரின் இந்த முடிவை தாம் ஏற்கப்போவதில்லை என தொழிற்சங்க உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு அடிப்படை சம்பளமாக 1000 ரூபாவை வழங்க, முதலாளிமார் சம்மேளனத்துக்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தொழிசங்க உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் முத்துசிவலிங்கம் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பான நிலைப்பாட்டை இன்று அறிவிப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் இன்று அறிவித்த தீர்மானம் தொடர்பில் தொழிற்சங்கம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.