மலையக மக்களின் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் 26ஆம் திகதி காலை 10 மணியளவில் தமது சம்பள உயர்வு கோரி அத்தோட்டத்தின் 7ஆம்  பிரிவைச் சேர்ந்த சுமார் 700க்கு மேற்பட்டோர் ரைட்டக்கறை தோட்ட தொழிற்சாலை முன்பாக ஆரம்பிக்கப்பட இப்போராட்டம் அமைதியான பேரணியாக மஸ்கெலியா எரிபொருள் நிலையம் முன்பாக வந்து தங்களது பகிஸ்கரிப்பை வெளிகாட்டினர்.

அவர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்த போது,தமது நாளொன்றுக்கான சம்பளம் 1000 ரூபாய் வேண்டும் என்றும் நாம் இன்று எவ்வித தொழிற்சங்கங்கள் சார்பில் இப்போராட்டத்தை நடாத்தவில்லை.எமக்கு வேதன உயர்வை எந்த தொழிற்சங்கங்களும் பெற்று தராது கம்பெனிகள் நமக்கு 1000ரூபா தர முடியாத பட்சத்தில் தோட்டங்களை அரசிடம் ஒப்படைத்துவிட்டு சென்று விடுங்கள் என தெரிவித்தனர்.

மேலும் கூறுகையில், இனியும் காலம் தாழ்தாது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உடன் இப்போராட்டத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.நல்லாட்ச்சிக்கு வாக்களித்த எங்களை ஏமாற்றாமல் 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று தரவேண்டும் இல்லையேல் நாம் நமது சந்தா பணத்தை நிறுத்த நேரிடும் என கோசம் எழுப்பினர்.