அவிசாவளை உக்குவத்தை சந்தியில் இருந்து புவக்பிட்டிய கிரிவந்தலை சந்திவரை இன்று காலை 9.30 மணியளவில் தொழிலாளர்கள் 1000ரூபா சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.இதில் 300ற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைளை ஏந்திய வண்ணம் 1000 ரூபா சம்பளத்தை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டனர். உக்குவத்தை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி சுமார் 2 மணித்தியாலயம் வரை நடைபயணமாக வந்து கிரிவந்தல சந்தியில் முடிவுற்றது.இதனால் அவிசாவளை, கொழும்பு பிரதான வீதி போக்குவரத்து குறிப்பிட்ட மணித்தியாலங்கள் ஒரு வழிபோக்குவரத்தானதோடு வாகன நெரிசலும் ஏற்பட்டது.