மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கவரவலை தோட்ட 4 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்களும், சாமிமலை நகர முச்சக்கர வண்டி சாரதிகளும் இணைந்து சாமிமலை ஓல்டன் சந்தியில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தோட்ட தொழிலாளர்களது இந்த போராட்டம் 2 வருடத்திற்கு ஒருமுறை நடத்தினாலும் தொழிலாளர்கள் சம்பள உயர்வு வழங்கப்படுவதில்லை  என்றும் அவ்வாறு வழங்கும் வேதனத்திற்கேற்ப தொழிற்சங்கங்கள் தமது சந்தாவை அதிகரித்து கொள்கின்றனர் என்றும் கோஷமிட்டதோடு, 1000 ரூபா சம்பளம் வழங்கினாலும் மாதாந்த சந்தா 350 ரூபாய் அறவிடுவர், இது தேவை தானா? என  கேள்வி எழுப்பினர்.

மேலும், "நாங்கள் காற்று மழை வெயில் பாராமல் வேலை செய்தும் நமக்கு 1000 ரூபா வழங்க மறுக்கின்றனர் ஆனால் தோட்ட முகாமையாளர்கள் சொகுசு கார்களில் பயணம் செய்வதற்கு 3 இலட்சம் ரூபாய் சம்பளமும் வழங்குகின்றனர்." என விசனம் தெரிவித்தனர்.