புத்தளம் பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற எல்ப் ரக லொறி ஒன்று முந்தல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாரதி உறங்கியதால் வீதியைவிட்டு விலகிய குறித்த லொறி அருகிலிருந்த மின்கம்பத்தில் மோதி குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

எனினும் உயிர் சேதங்களோ பாரிய காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லையென முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.