300 ஆண்டுகளுக்கு முந்தைய கணிதப் புதிர் ஒன்றிற்கு விடை கண்டுபிடித்த இங்கிலாந்து பேராசிரியருக்கு, நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி ரூபா 4.5 கோடியை பரிசாக வழங்கவுள்ளது. 

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் கணிதப் புதிர் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கு யாராலும் விடை காண இயலவில்லை. 

தொடர்ந்து மூன்று நூற்றாண்டுகளாக அந்தக் கணிதப் புதிருக்கு விடை தேடப்பட்டு வந்தது. குறித்த கணித புதிருக்கு விடை கண்டு பிடித்தால் பரிசு வழங்கப்படும் என்று 1994 ஆம் ஆண்டு நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்திருந்தது. 

இந்நிலையில், இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ வில்ஸ், குறித்த புதிருக்கான விடையைக் கண்டுபிடித்துள்ளார். 

இந்நிலையில்,  நோர்வே நாட்டு அறிவியல் அக்கடமி அறிவித்தபடி, பேராசிரியருக்கு 4.5 கோடி ரூபா பரிசு வழங்க முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.