மகனைக் கத்தியால் வெட்டிவிட்டு, தந்தை தனது உயிரை மாய்த்த சம்பவம் வடமராட்சியின் கரவெட்டி தேவரையாளி என்ற இடத்தில்  இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 63 வயதுடைய பாக்கியராஜா என்பவரே தனது உயிரை மாய்த்துள்ளார்.

தந்தையின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய அவரது மகன் மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஆத்திரமடைந்த தந்தை மகனை கத்தியால் இரண்டு தடவைகள் வெட்டியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றிரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதோடு மகனுக்கும் தந்தைக்கும் ஏற்பட்ட தகறாரில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நெல்லியடி  பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கெண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.