இரத்தினபுரி பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தேல பனகம பன்னிலந்த பிரதேசத்தில் நேற்று மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மலை உச்சிலிருந்து பாரிய அளவிலான கற்கள் மற்றும் பாரிய மரங்கள் மண் திட்டுகள் சரிந்து விழுந்துள்ளது.

குறித்த பிரதேசத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட 16 குடும்பங்களை சேர்ந்த 63 பேர் தத்தமது உறவினர்களின் இல்லத்தில் தஞ்சமடைந்தள்ளனர்.

மண்சரிவு காரணமாக பனகம பன்னில்கந்த பிரதேசத்தின் அருகில் அமைந்துள்ள புலுகாஹாதென்ன வித்தியாலயமும் மூடப்பட்டுள்ளது. இப்பாடசாலையில் பாடசாலையில் 400 மாணவர்கள் கல்லி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.