கார்த்தி நடிக்கும் ‘தேவ் ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து. அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில், பொக்ஸ் ஓபிஸ் சுப்பர் ஸ்டார் கார்த்தி நடிக்கும் தேவ் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.

பயணத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் எக்சன் திரில்லர் படமான இதில் கார்த்தி துதி சக்கர வாகனத்தை ஓட்டும் வீரராக நடிக்கிறார் என்று செய்தி வெளியாகியிருக்கிறது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்திருக்கிறார். மூத்த நடிகர் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார்.

கார்த்தி தன்னுடைய திரையுலக பயணத்தில் பதினேழாவது படத்தில் நடிக்கிறார். இதனை குறிப்பாக உணர்த்தும் வகையில் அவர் ஃபர்ஸ்ட் லுக்கில் வாகனத்தின் பதிவெண்ணில் K 17 என்று குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் அறிந்து கொண்டு கொண்டாடுகிறார்கள்.

தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் கார்த்தியின் தேவ் திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.