(ஆர்.விதுஷா)

ராகமை - பேரலந்த புகையிரத நிலையத்திற்கு அண்மையில் புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை 10.10 மணியளவில் இடம் பெற்றுள்ளது. 

வவுனியாவிலிருந்து  மாத்தறை நோக்கி பயணித்த ரஜரட்ட மெனிக்கே  கடுகதி புகையிரதம் மோதியமையினாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது. 

உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில்  சடலம் ராகமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் , விபத்துடன் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகமை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.