மலையகத்தில் தொடரும் சீரற்ற காலைநிலையுடன் கடும் மழை பெய்து வருவதனால் நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.அந்த வகையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளமையினால் பொல் கொல்ல பகுதி  ஆற்றை அண்மித்து வாழ்வோர் அவதானமாக  இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.