கரையோர பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இன்றிரவு 8 மணி முதல் தாமதமாகுமென ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு வெள்ளவத்தையினூடான ரயில் பாதையிலுள்ள பாலம் புனரமைக்கப்படுவதால் ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படக்கூடும் எனவும் இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.30 வரை கொழும்பு கோட்டையிலிருந்து கல்கிஸ்ஸை வரையும் ஒரு பாதையிலான ரயில் சேவை மாத்திரமே முன்னெடுக்கப்படும் எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தூர இடங்களுக்கான ரயில் சேவைகளை தாமதமின்றி முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.