முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  அரசியல் ரீதியில் கற்றுக் கொள்ள வேண்டிய பல விடயங்கள்  காணப்படுகின்றதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.விவசாயத்துறை அமைச்சில் இன்று  இடம் பெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும்  குறிப்பிடுகையில்,

“ரோ” அமைப்பு  தொடர்பில் தகவல் வழங்கியதாக குறிப்பிடப்படும்   அமைச்சரவையில்  உள்ள நால்வரும்    இந்திய புலனாய்வு பிரிவில் மாத சம்பளம் பெறுபவர்கள் என்று பாராளுமன்ற  உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளமை  கூட்டு எதிரணி  என்ற பிரிவின் இயல்பாக காணப்பட்டாலும் சிறந்த அரசியல் கொள்கைகளுக்கு முரணானது.

எனது நாட்டின் உள்ளக விவகாரங்களில் எதிர்த்தரப்பினர்  தங்களின் கொள்கைகளுக்கு  இணங்க செயற்படலாம் ஆனால்   சர்வதேச விவகாரங்களின் போது சில  நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அமைச்சரவையில் “ரோ”  புலனாய்வுப்  பிரிவுடன் தொடர்புடைய   அமைச்சர்கள்   இருக்கின்றார்களா ?   என்பது தொடர்பில் குறிப்பிடுவது கடினமானது.   அவ்வாறான தொடர்புகள் ஏதும் இல்லை என்றே நான்  கருதுகின்றேன் என்று  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  குறிப்பிட்டுள்ளமை அவரது  சிறந்த அரசியல் தூர நோக்கு  கொள்கையினை வெளிப்படுத்துகின்றது.  

இவரிடம் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ அரசியல் ரீதியில் கற்றுக்கொள்ள  வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.