யாழ் நூலகஎரிப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் துமிந்த திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்த குமார் வெல்கம நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகேயே யாழ் நூலக எரிப்பிற்கு காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக பல குற்றச்சாட்டுகளை குமார் வெல்கம முன்வைத்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம முன்வைத்திருந்த பாரதூரமான குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என துமிந்த திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் இன்னொரு நபரின் கரங்கள் குருதியில் நனைந்துள்ளன அவர் சில குற்றங்களிற்கு காரணம் என குற்றம்சாட்டினால் இந்த முக்கியமான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என துமிந்த திசநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையா என்பதை கண்டுபிடிப்பதற்கு உரிய அமைப்புகள் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என அவர் கோரியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மையென்றால் அதற்கு காரணமானவர்களிற்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குமாரவெல்கம தெரிவிக்கும் ஒவ்வொரு விடயமும் முக்கியமானது அவர் தனது மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர், எனவும் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM