(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

கூட்டு ஒப்பந்தம் என்ற பெயரிலிருந்து அரசாங்கத்தால் நழுவ  முடியாது எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், கம்பனிகளுடன் கலந்துரையாடி மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும் எமது நாட்டில் அமைச்சர்களுக்காக பாரியளவில் செலவிடப்படுகின்றது. இந்த செலவை மட்டுப்படுத்தி மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற நிதிச்சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.