கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தினை எவருக்கும் அரசாங்கம் வழங்காது என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்திக்காக இந்தியாவின் முதலீட்டை இலங்கை ஏற்றுக்கொள்ள தயார் என  அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்

மேற்கு முனையத்தின் அபிவிருத்தியில் இந்தியாவின் முதலீட்டை இலங்கை வரவேற்கின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்தியா இதனை வலியுறுத்தவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும்  துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை எவருக்கும் அரசாங்கம் வழங்காது எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிற்கு வழங்கவேண்டும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க விரும்புகின்றார் எனினும் ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன நிலையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அபிவிருத்தி திட்டங்களை மெதுவாகவே முன்னெடுக்கின்றது என்பதை அமைச்சர்  ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 2017 ஏப்பிரல் 26 இல் கைச்சாத்தான உடன்படிக்கையின் அடிப்படையில் பல திட்ட்ங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள அமைச்சர் சில திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை ஏனைய திட்டங்களை இலங்கை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.