அமைச்­சர்­களின் மல­சலகூடங்கள் கூட மிகத் தர­மாகக் காணப்­ப­டு­கின்­றன. ஆனால் தமிழ் மக்களின் வீடுகள் தரம் குறைந்தே இதுவரை இருந்துவருகின்றன. இதில் அவர்கள் எப்­படி வாழமுடியும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க கேள்வி எழுப்பினார்.

“தேசிய நல்­லி­ணக்­கமும் நாட்டின் எதிர்­கா­லமும்” என்ற தலைப்பில் நேற்று முன்­தினம் கிளி­நொச்சி மாவட்ட கூட்­டு­ற­வுச்­சங்க மண்­ட­பத்தில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்இ

கடந்த 68 வரு­டங்­க­ளாக ஆட்சிசெய்த அர­சாங்­கங்­க­ளினால் நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்றோம். ஆனால் மாறி­மாறி அர­சாங்­கங்­களை ஆட்­சிக்குக் கொண்டு வந்தோம். எமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வு­களும் கிடைக்­க­வில்லை.

இதை­விட எமது மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வுகள் எவையும் எட்­டப்­ப­ட­வில்லை. இந்த நிலைமை வடக்­கிலும் தெற்­கிலும் அதிகம் காணப்­ப­டு­கின்­றது.

வடக்கில் யுத்­தத்தின் பின் நிலைமை மோச­மா­க­வுள்­ளது. எமது பிள்­ளை­களின் எதிர்­கா­லத்தை கருத்­திற்­கொண்டு கல்­விக்கு நல்ல ஓர் அர­சாங்கம் உரு­வாக்­கப்­ப­ட­வேண்டும். இன்று மாண­வர்கள் கல்வி கற்­ப­தற்கு போதிய வச­திகள் செய்துகொடுக்­கப்­படவில்லை.

ஆனால் அமைச்­சர்கள்இ பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பிள்­ளைகள் வெளி­நா­டு­களில் சென்று கல்வி கற்­று­விட்டு மீண்டும் நாட்­டுக்கு வந்து தேர்­தலில் போட்­டி­யி­டு­கின்­றனர். அவர்கள் அமைச்­சர்­க­ளாகஇ பாராளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளாகஇ மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளாக ஆட்­சிக்கு வரு­கின்­றனர்.

எமது பிள்­ளைகள் அடிப்­ப­டைக்­கல்­வியும் இல்­லாது அடிப்­படை தொழில்வாய்ப்பும் இல்­லாது மிகவும் கஷ்டப்­ப­டு­கின்­றார்கள். வடக்கு மீன­வர்­களின் பிரச்­ச­ினை மிகவும் பாரிய பிரச்­ச­ினை­யா­க­வுள்­ளது. இந்­திய மீன­வர்­களின் துன்­பு­றுத்­தல்கள் அதிகம். இதனால் எமது மீன­வர்­களின் தொழில் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. மாறி­மாறி ஆட்­சிக்கு வந்த அர­சாங்­கங்கள் பலரைக் கடத்திஇ கொலை செய்­தார்கள். பொது மக்­களின் சொத்­துக்­களை அழித்­தார்கள். யாழ். நூல­கத்தை எரித்­தார்கள். எமது செயற்­பாட்டு உறுப்­பி­னர்­க­ளான லலித்­, குகன் ஆகி­யோரைக் கடத்­தி­னார்கள். அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று இது­வரை தெரி­யாது. இப்­படி தொடர்ந்து ஆட்சிசெய்யும் அர­சாங்­கங்­க­ளினால் நாங்கள் துன்­பு­றுத்­தப்­பட்டு வரு­கின்றோம்.

அமைச்­சர்­களின் மல­சலகூடங்கள் கூட மிகத் தர­மாக காணப்­ப­டு­கின்­றன. சிலரின் மல­சலகூடங்­க­ளுக்கு ஏசி கூட பொருத்­தி­யி­ருக்­கி­றார்கள். விமல் வீர­வன்­ஸவின் மாதாந்த மின் கட்­டணம் ஒரு இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா. கெஹெலிய ரம்­புக்­வெ­லவின் மாதாந்த வீட்டு மின் கட்­டணம் ஒரு இலட்­சத்து 19 ஆயிரம் ரூபா.

ஆனால் மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்கு அரசு வழங்­கி­யது பத்து தக­ரமும்இ 25 ஆயிரம் ரூபா பணமும். இதில் அவர்கள் எப்­படி வீடு­களை அமைத்து வாழமுடியும்?

காலத்­திற்கு காலம் ஆட்­சிக்குவரு­கின்ற அர­சுகள் தங்­க­ளு­டைய நலன்­க­ளையும்இ பொரு­ளா­தார பலத்­தையும் பெருக்­கிக்­கொண்­டார்­களே தவிர மக்களின் பிரச்சி-னைகளை தீர்த்துவைத்ததாக இல்லை.

மேலும் வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்திற்கு வருகின்றவர்கள் இனவாதம் பேசுகின்றவர்களாகவே இருக்கின்­றார்கள். இதை எதிர்த்து நாங்கள் அனை-வரும் ஒன்றிணைந்து கைகோர்த்து எமது உரிமைக்காக போராடுவோம் என்றார்.