முப்பது வருடகால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்று காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்கின்றனர் என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.வவுனியா பூந்தோட்டம் முதியோர் சங்கத்தினால் முதியோர் தினமும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்று பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
முதியோர் தினம் என்பது எங்களுடைய கலாச்சாரத்தை பொறுத்தவரையில் ஒரு தேவையில்லாத விஷயமாக இருந்தாலும் கூட நாங்கள் பல காரியங்களை காரணம் தெரியாமல் ஒரு முகம் நாங்கள் செய்து வருகிறோம் சில வேளைகளில் அது வேடிக்கையாகவும் இருக்கும்.
முப்பது வருடகால யுத்தததில் எங்களுடைய சமுதாயத்தில் சமுதாயத்திற்கு ஒவ்வாத பல விடயங்கள் நடந்து முடிந்திருக்கிறது.
ஆனால் அந்த சமுதாயத்திற்கு ஒவ்வாத விடயங்களை செய்தவர்களே அந்த விடயங்களுக்கு எதிர்ப்பாக இப்போது போராட்டங்களை செய்கிறார்கள், அதை பற்றி பேசுகின்றனர்.
காணாமல் போனவர்களை எடுத்துக் கொண்டால் இந்த முப்பது வருட கால யுத்தத்தில் காணாமல் போவதற்கு காரணமாக இருந்தவர்களே இன்றைக்கு காணாமல் போனவர்கள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
காணாமல் போனவர்கள் ஏன் காணாமல் போனார்கள் எவ்வாறு காணாமல் போனோர் போன்ற பலரின் விடயங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுவர்களிற்கு தெரியும்.
ஏன் எனில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள்தான் காணாமல் போக செய்தவர்கள் என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM