இளம்பெண்ணை கொலை செய்து அவளுடைய சடலத்துடன் உறவு வைத்து விட்டு, உடல் பாகங்களை சாப்பிட வேண்டும் என கொடூரமான பதிவை வெளியிட்ட அமெரிக்க இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த அலெக்சாண்டர் நேதன் பார்டர் என்ற 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு செய்துள்ளார்.

அதில், “எனக்கு இளம்பெண்ணை கொலை செய்து அவளுடைய சடலத்துடன் உறவு வைத்துக்கொண்டதன் பின்னர், மாமிசத்தை ருசி பார்க்க வேண்டும் என ஆசை. சம்மதம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறீர்களா?” என பதிவிட்டுள்ளார்.

இதனை கவனித்த உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர், “எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் என பதில் கொடுத்துள்ளார்.

அதற்கு நேதன், “நல்லது! நான் கிழக்கு டெக்சாஸில் இருக்கிறேன். உங்கள் மகள் எவ்வளவு வயதானவர்? நாம் அவளை கொல்லலாமா?” என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அதிகாரி ஒப்புக்கொள்ளவே, இருவரும் ஒரு ரகசியமான மின்னஞ்சல் முகவரிகளை பரிமாறிக்கொண்டு, மகளுடன் சந்திப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்தனர்.

அந்த திட்டத்தில், உங்களுடைய மகள் ஹோட்டலுக்கு காரை ஒட்டி வர வேண்டும். அங்கு வைத்து தாக்கி நான் கொலை செய்துவிடுவேன். அதன் பிறகு செல்போனை எரித்துவிட்டு, புதிய ஆடைகளை உடுத்திக்கொண்டு நான் அங்கிருந்து தப்பி விடுவேன்.

நீங்கள், உங்களுடைய மகள் வீட்டிலிருந்து ஓடிப்போய்விட்டால் என வெளியில் கூறி சமாளித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளான்.

அதன் பின்னர் தன்னுடைய இணையத்தில், “நான் இந்த முடிவில் இருந்து மாறப்போவதில்லை. நான் நிச்சயமாக இதை செய்யத்தான் போகிறேன்” என பதிவிட்டான்.

இளைஞரின் திட்டங்களை நன்றாக கவனித்து கொண்ட அதிகாரி, மற்ற அதிகாரிகளின் உதவியுடன் இளைஞரின் இணைய முகவரியை கண்டறிந்துள்ளார்.

அதன்படி சந்திப்பு நாளான 19-ம் திகதியன்று நேதனை கைது செய்த அதிகாரி, அவன் வைத்திருந்த பொருட்களை ஆய்வு செய்தார். அதில், ஒரு கத்தி மற்றும் பிளாஸ்டில் பை இருந்தது. இதனையடுத்து குற்றவாளி நேதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.

இச்சம்பவத்தை வேறு அதிகாரிகளும், பொலிஸ் அதிகாரிகளும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர்.