பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை, 1000 ரூபாயாக உயர்த்துமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் பழைய மாவட்ட செயலகம் முன்பாக  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணிக்கு  இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

எங்கள் குருதி அட்டைக்கு எங்கள் உழைப்பு அரசுக்கு, அதிகரித்த விலையிலும் அரைகுறை சம்பளமா?, ஏழை மக்களை ஒடுக்காதே அரசே, வழங்கு வழங்கு  ஆயிரம் ரூபாவுக்கு மேல் சம்பளம் வழங்கு, சுரண்டாதே சுரண்டாதே எங்களது உழைப்பை சுரண்டாதே, அரசே நீ என்ன தோட்டத்  முதலாளியின் தூதுவரா? சலுகைகளை கேட்கவில்லை உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கேட்கிறோம் போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும்  போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

குறித்த இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மற்றும் தமிழரசு கட்சியின் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.