தம்புள்ளை, கெக்கிராவ வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியொன்றும், வேன் ஒன்றும் மோதியமையினாலேயே குறித்த விபத்து நேற்றிரவு சம்பவத்துள்ளது. 

விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.