வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து சென்ற மக்கள் தற்போது கடந்த 2017ஆம் ஆண்டு சாளம்பைக்குளத்தை அண்டிய வேறு பகுதிகளில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர்.
இதனால் பல ஏக்கர் தனியாரின் நிலப்பரப்புக்கள் அபகரிக்கப்பட்டுள்ளதுடன் தயாரிக்கப்பட்ட வரைபடத்திற்கு அப்பால் சென்று குடியேற்றங்களுக்காக காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சர் ஒருவரின் அடாவடி நடவடிக்கையினாலும் வன்னிப்பிராந்தியத்திலுள்ள கையாலாகாத மக்கள் பிரதிநிதிகளின் இயலாத்தன்மையினாலும் இப்பூர்வீக நிலங்கள் தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு சட்டவிரோத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கான சான்றுகளும் ஆதாரங்களும் வவுனியா பிரதேச செயலகத்தில் உள்ளன.
காடுகள் அழிக்கப்பட்டு 456 குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளபோதிலும் பல பிரதேசங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீட்டுத்திட்டங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருசில இடம்பெயர்ந்தவர்களை பெயரளவில் முன்பகுதிகளில் குடியேற்றங்கள் செய்யப்பட்டு அதிகளவானவர்களை இங்கு கொண்டு வந்து குடியேற்றப்பட்டு கணக்கறிக்கைகளுக்காக தகவல்கள் வழங்கப்பட்டு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த ஓராண்டுகள் கடந்த நிலையிலும் இங்கு நிரந்தரமாக குடியிருப்பவர்கள் 196 குடும்பங்கள் எனப்புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை அதுவும் தமிழர்களின் பூர்வீக இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட இடங்களை இப்பகுதிக்குள் உள்ளீர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. இதனைக்கண்டு கொள்ளவோ, நடவடிக்கை மேற்கொள்ளவோ எமது தலைமைகள், பிரதிநிதிகள் எவரும் முன்வரவில்லை.
அதிகாரிகளுக்கு அமைச்சரின் பயமுறுத்தலுக்கு மத்தியில் இப்பகுதியில் துரித கதியில் குடியேற்றப்பட்டுள்ளனர். இதேவேளை யுத்தம் இடம்பெற்ற பல பிரதேசங்களிலிருந்து வெளியேறிய தமிழ் மக்கள் இன்றுவரையும் தமது சொந்த இடங்களில் மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்களது இருப்பிடங்களை விட்டு இராணுவத்தினர் வெளியேறவுமில்லை. இவ்வாறு தமிழர்கள் அவல நிலையிலிருந்து வெளிவரவில்லை. வெளிக்கொண்டுவரப்படவுமில்லை.
சாளம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ளவர்களில் 1515 பேருக்கே வாக்காளர்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 215 தமிழர்களின் வாக்குகளும் உள்ளது. கிட்டத்தட்ட மூவாயிரம் எண்ணிகையைக்கொண்டவர்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு குடியேற்றப்பட்டவர்கள் ஹிக்கிரிக்கொலாவை,அனுராதபுரம், மன்னார் போன்ற பகுதிகளிலிருந்தே குடியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 2012, 2013ஆம் வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இக்குடியேற்றம் தற்போது நிறைவுற்றுள்ள நிலையிலும் 100ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு தற்போது வீட்டுத்திட்டம் தேவை என்று பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரை ஏக்கர் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டப்பகுதியில் கிணறுகள், தண்ணீர் தொட்டிகள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன. நில அளவை மேற்கொள்ளப்பட்டு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ள போதிலும் குடியேற்றம் செய்யப்படாமல் பல வீடுகள் காட்சியளிக்கின்றதுடன் பல வீடுகளுக்குச் சொந்தக்காரர்கள் வெளிமாவட்டங்களில் வசித்து வருகின்றனர்.
அவர்கள் தமது வசதி வாய்ப்புக்களைக் காரணம் காட்டி இங்கு வசிப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இங்கு வசித்துவருபவர்கள் கூலித் தொழிலையே எதிர்பார்த்து தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி இப்பகுதியிலுள்ளவர்களையும் விட்டுவைக்கவில்லை. இப்பகுதியில் வசித்து வந்த பூர்வீக மக்களின் நிலங்களும் மேலும் சில பகுதிகளும் இங்குள்ளவர்களினால் உரிமைகள் கோரப்பட்டு வருகின்றன.
புதிய சாளம்பைக்குளம் என அழைக்கப்படும் இடங்களையும் பழைய சாளம்பைக்குளம் பகுதியையும் இணைக்கும் நடவடிக்கைகளும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு இணைக்கும்போது பூர்வீக நிலங்களும் இங்கு வசித்து வந்த தமிழ் மக்களின் வரலாறுகளும் அழிக்கப்படுவதுடன் தமது குடியற்றங்களை மேலும் அதிகரித்து இப்பகுதியில் தமது இருப்புக்களையும் வாக்காளர்களையும் அதிகரித்து பெரும்பான்மையாக தம்மை தயார்ப்படுத்திக்கொள்ளும் மறைமுக வேலைத்திட்டம் இங்கு இடம்பெற்று வருகின்றன.
பழையசாளம்பைகுளம் பகுதியில் மாடுகள் வெட்டும் கொள்களம் ஒன்று அமைக்கப்பட்டு காடு வளர்ந்து காட்சியளிக்கின்றதைக்காண முடிகின்றது. எதிர்காலத்திற்கான திட்டமிட்ட நடவடிக்கையும் இங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார் செல்லும் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள இப்பகுதியில் வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடங்களும் நிர்வாகப்பகுதிகளும் திறந்துவைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகளும் இங்கு காணப்படுகின்றன.
இப்பகுதிக்கான பள்ளிவாசல் ஒன்று (21.09.2018) குவைத் நாட்டின் தனவந்தரின் உதவியுடன் மிகப்பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. நகரின் மத்தியிலுள்ள பள்ளிவாசலுக்கு நிகரானதாகவே அமையப்பெற்றுள்ளது. இவ்வாறு அனைத்து வளங்களையும் திட்டமிட்ட வகையில் நகர்த்தி எதிர்காலத்தில் இங்கு வசித்து வந்த பூர்வீக குடிகளுக்கு அச்சுறுத்தலையும், ஆபத்தையும் எதிர்காலத்தில் ஏற்படுத்தும் நடவடிக்கையாகவே இக்குடியேற்றப்பகுதி காணமுடிகின்றது.
- தீசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM