நிர்மாணிக்கப்பட்டு வரும் ஏறாவூர் நவீன பொதுச் சந்தையை பொது மக்கள், வியாபாரிகளின் நலனை கருத்திற் கொண்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் வியாபார நடவடிக்கைகளுக்காக திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபன அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் மின்சாரம், மலசல கூட வசதி உட்பட சுருள் கதவு போன்ற இணைப்பு வேலைகள் மாத்திரம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.