நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக  பெரும்பாலான பகுதிகளில் கடும் மழையினால்  நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. 

பாராக்கிரம சமுத்திரத்தின் ஆறு வான் கதவுகள், ராஜன்கனாய் நான்கு வான் கதவுகள், தெதுரு ஓய நான்கு வான் கதவுகள், குக்குலிகம ஒரு வான் கதவு மற்றும் அங்கமுவ ஒரு வான் கதவு  ஆகிய வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழையுடனான காலநிலை தொடரும்  என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.