நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் தற்போது இயங்கி வருவதாகவும் இன்று முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நேற்று முதல் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தும்  பல இடங்களிலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டது. 

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் நேற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டமேயெ அதற்குக் காரணம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நேற்று மாலை 300 மெகா வோர்ட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்புடன் இணைக்க முடிந்ததனால் மின் துண்டிப்பு அகற்றப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.