“ரோ”வுடனான சர்ச்சை முடிந்ததா ? தொடருமா ?

Published By: Digital Desk 4

23 Oct, 2018 | 09:00 PM
image

இலங்கை அரசியல்வாதிகள் கட்டுக்கதைகளையும் நடைமுறைக்கு ஒத்துவராத ஊகங்களையும் வெளியிடுவதில் கைதேர்ந்தவர்கள். ஒவ்வொரு புதருக்குப் பின்னாலும் ஒரு சதிகாரரைக் காணும் அவர்கள் தங்களது தோல்விகள் சகலவற்றுக்கும் சதிவேலைகளே காரணம் என்று கூறுவதற்கு தயங்குவதில்லை. 

எமது நாட்டில் வெளிநாட்டு உளவு நிறுவனங்களின் அந்தரங்கச் செயற்பாடுகள் இல்லை என்று எவரும் கூறிவிடமுடியாது எனினும் அரசியல்வாதிகள் நரகமே கொள்ளாத எண்ணிக்கையில் பிசாசுகள் இங்கே இருப்பதாகக் கூறுவதற்கும் கூட தயங்கமாட்டார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னைக் கொலைசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற  முயற்சியின் பின்னணியில் இந்திய புலனாய்வு நிறுவனமான “ரோ”  இருப்பதாக கடந்தவாரம் கூறியதன் மூலமாக தன்னைத்தானே ஒரு அசௌகரியமான சூழ்நிலைக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்.ஆனால், தனது கூற்று தொடர்பாக இந்தியாவின் முக்கியமான தேசியப் பத்திரிகைகளில் ஒன்றான ' இந்து ' உட்பட பல பத்திரிகைகளில் வெளியான செய்திகளை உடனடியாகவே மறுத்த அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி சர்ச்சையைத் தணிக்கவும் முயற்சித்திருந்தார். 

ஜனாதிபதி இவ்வாறு செய்து ஒரு வாரம் கூட கடந்துபோக முன்னர் அவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அமைச்சர மகிந்த அமரவீர தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் நான்கு அமைச்சர்கள் “ரோ”வுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியதைக் காணக்கூடியதாக இருந்தது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளராகவும் இருக்கும் அமரவீர தனது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையின் பெலியத்தையில் பொது வைபவமொன்றில் உரையாற்றியபோது “ரோ”வுடன் தொடர்புகளைக் கொண்டுள்ள அமைச்சர்களே சர்ச்சைக்குரிய விவகாரம் குறித்து இந்திய ஊடகங்களுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் கூறினார்.

 தன்னைக் கொலைசெய்வதற்கு முயற்சிப்பதாக “ரோ”வை ஜனாதிபதி சிறிசேன குற்றஞ்சாட்டியதாக வெளியான பத்திரிகைச் செய்திகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைப்பதற்கான தீயநோக்குடனான முயற்சிகளின் ஒரு அங்கமே என்று அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் ' றோ ' வுடன் தொடர்புடைய சில அமைச்சர்களே கதைகளைத் திரிக்கிறார்கள் எனறு அமைச்சர் அமரவீர இப்போது கூறுகிறார் என்றால் அவ்வாறு இந்திய புலனாய்வு நிறுவனத்துடன் தொடர்புகளை வைத்திருப்பவர்கள் கட்டுக்கதைகளைப் பரப்புவதன் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சீர்குலைக்க ஏன் முயற்சிக்வேண்டும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? பத்திரிகைச் செய்திகளைப் பற்றிய அரசாங்கத்தின் நிலைப்பாடும் அமரவீரவின் குற்றச்சாட்டும் ஒரே நரத்தில் உண்மையாக இருக்கமுடியாதே.

மூன்றாவது பதவிக்காலத்துக்கு மக்களின் ஆணையைப் பெறுவதற்காக தனது இரண்டாவது பதவிக்காலம் முடிவடைவதற்கு இரு வருடங்கள் இருந்த நிலையில் 2015 ஜனவரியில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்கு இரகசியத்திட்டத்தைத் தீட்டிக்கொடுத்தது “ரோ”வே என்று குற்றஞ்சாட்டியதை இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். ராஜபக்சவின் தோல்வியின் பின்னணியில் “ரோ” இருந்ததோ இல்லையோ என்பது யார் அறிவார்? ஆனால், “ரோ” வின் தலையீட்டுடனோ அல்லது அதன் தலையீடு இல்லாமலோ 2015 ஜனவரியளவில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான தேவை உணரப்பட்ட அளவுக்கு ராஜபக்ச அரசாங்கம் படுமோசமான ஆட்சியைச் செய்துகொண்டிருந்தது என்பது மாத்திரம் உண்மை.

 அந்த ஆட்சி மாற்றத்தை புதுடில்லி முழுமனதுடன்  வரவேற்றது.அதற்கு பிரதான காரணம் ராஜபக்ச அரசாங்கம் சீனாவுடன் கொண்டிருந்த கடுமையான நெருக்கமேயாகும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியாவுக்கு எது நல்லதோ அதையே “ரோ”செய்கிறது...இனிமேலும் செய்யும் என்பதைக் கூறுவதற்கு எவரும் அரசியல் மேதையாக இருக்கவேண்டியதில்லை.இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற நகர்வுகளின் பின்னணியில் இந்தியாவுக்கு விரோதமான நாடொன்றின் புலனாய்வு அமைப்பு இருப்பதாக ஜனாதிபதி தரப்பு குற்றஞ்சாட்டியிருந்தால் அதில் ஏதாவது நம்பகத்தன்மை இருந்திருக்கமுடியும்.

அமைச்சர் மகிந்த அமரவீரவும் ' இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீது ஆத்திரமடைந்திருக்கு மற்றவர்களும் அவருக்கு அமைச்சரவையில் நடந்தவற்றைப் பற்றி தகவல்கொடுத்தவர்களை “ரோ” வின் கையாட்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால் , அதே செய்தியை உள்நாட்டு பத்திரிகைகள் அனேகமாக சகலதுமே  முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டதை ஏன் இவர்கள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்? இலங்கைப் பத்திரிகைகளும் அவற்றுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை ஆதாரமாகக்கொண்டே செய்திகளை வெளியிட்டிருந்தன. 

அந்த தகவல்களை அமைச்சரவை உறுப்பினர்கள் கொடுக்கவில்லை என்று அமரவீரவினால் அறுதியிட்டுக்கூற முடியுமா? இந்த அமைச்சர்கள் சகலருமே “ரோ”வுடன் தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் என்றோ அல்லது இலங்கைப் பத்திரிகைகள் இந்திய புலனாய்வு நிறுவனத்துக்காக வேலை செய்கின்றன என்றோ அரசாங்கம் கூறுகிறதா? 

 தனது அமைச்சரவைச் சகாக்களில் எவராவது “ரோ” வுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள் என்று அமைச்சர் அமரவீர குற்றஞ்சாட்டுகின்றார் என்றால் அவர் அதை உறுதியான ஆதாரங்களுடன் நிரூபிக்க்கவேண்டும்.அல்லாவிட்டால், அமைச்சரவை உறுப்பினர்கள் சகலருமே சந்தேகிக்கப்படுவார்கள். அமைச்சரவை உறுப்பினர்களை பெயர்குறிப்பிடாமல் “ரோ” வின் கையாட்கள் என்று அமரவீர குற்றஞ்சாட்டியது குறித்து இதுவரையில் எந்தவொரு அமைச்சருமே் தர்மாவேசம் கொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சி மறைப்பதற்கு ஒன்றும் இல்லையென்றால் பெயர்களைக் குறிப்பிடுமாறு அமரவீர மீது நெருக்குதலை அது பிரயோகிக்கவேண்டும்.அவ்வாறு செயயுமா? 

 செய்திகளில் வெளியானதைப் போன்று ஜனாதிபதி சிறிசேன எதையும் கூறவில்லை என்று மறுப்பு அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் நாட்டு மக்களை நம்பவைக்கமுடியும் என்று அரசாங்கம் நினைத்தால் அது தவறாகும். இந்து பத்திரிகையின் கொழும்பு செயதியாளர் மீரா சிறீனிவாசனுக்கு அச்சுறுத்தலையோ தொல்லையையோ கொடுக்கக்கூடிய எந்தவொரு அணுகுமுறையையும் அரசாங்கம் கடைப்பிடிக்கக்கூடாது.தொடர்ந்து பொய்களைக் கூறுவதன் மூலமோ அல்லது மறைமுகமான அச்சுறுத்தல்களை விடுப்பதன் மூலமோ ஊடகங்கள் உண்மைகளைத் திரித்துக்கூறுகின்றன என்று நம்பக்கூடியதாக உலகைத் தவறாக வழிநடத்துவது எதுவிதத்திலும் சர்ச்சைக்கு முடிவுகட்ட உதவாது. ஜனநாயகத்தை மீட்டெடுத்திருப்பதாகவும் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டியிருப்பதாகவும் பெருமை பாராட்டுகின்ற தேசிய ஐக்கிய அரசாங்கத்தின் தலைவர்கள் ஊடகங்களைக் கையாளுகின்ற விடயத்திநிதானமாக செயற்படவேண்டும்.

(வீரகேசரி இணையத்தள ஆய்வுத் தளம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலையான தீர்வுகளுக்கான தேசிய கொள்கை அவசியம்...

2025-02-07 11:00:58
news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27