(ஆர்.விதுஷா )

நாட்டின் பயங்கரவாத   செயல்களுக்கு எதிராகவும்  , பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளையும் தடுப்பதற்காகவும் 1979 ஆம் ஆண்டு 48 ஆம் இலக்க  பயங்கரவாத தடைச்சட்டத்தில் பார்க்கிலும்  தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமானது  நீதிக்கு எதிரானது.

எனக்கூறிய  முன்னிலை சோஷலிஸ கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயக்கொட , பயங்கரவாத தடைச்சட்டத்தை  தடை செய்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உட்பட நாட்டுமக்களின் நலனை பாதிக்கும் வகையில் அமையும் அடக்கு முறை சட்டங்களை  தவிர்பபதற்காகவும் ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்காக  இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய வகையில் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார் .

இன்று செவ்வாக்கிழமை  சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.