இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக  திஸாநாயக்கவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரியான விமல் நந்திக  திஸாநாயக்க நேற்று மாலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்திருந்தது.

 கிரிக்கெட் தொட­ரின் ஒளி­ப­ரப்பு உரி­மைக்­கான நிதியை தனிப்­பட்ட ஒரு­வரின் கணக்­குக்கு மாற்­று­வ­தற்கு முய­ற்­சிகள் மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரிலேயே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டார்.

 குறித்த ஒளிப­ரப்பு நிறு­வ­னத்­தினால் வழங்­கப்­ப­ட­வி­ருந்த 5.5 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­களையே இப்­படி தனிப்­பட்ட கணக்­குக்கு மாற்ற முயற்­சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இன்று அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது