மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பூநொச்சிமுனை பிரதேசத்தில் 9 வயது சிறுமி ஒருவரை 52 வயதுடைய தேனீர்கடை முதலாளி பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நேற்று  இரவு கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.பாடசாலை ஒன்றின் தரம் 4ம் ஆண்டு கல்விகற்றுவரும் 9 வயது சிறுமி சம்பவதினமான கடந்த 19 ம் திகதி வெள்ளிக்கிழமை பாடசாலைக்கு சென்ற பின்னர்  பாடசாலைக்கு முன்னாள் உள்ள குறித்த தேனீர்கடைக்கு சிற்றுண்டி வாங்கச் சென்றுள்ள போது கடையில் எவருமில்லாததையடுத்து கடை முதலாளி  அச்சிறுமியை கடையின் பின்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். 

இதனையடுத்து பாதிக்கப்பட் சிறுமி தனது தாயிடம் தனக்கு நோர்ந்தகதி குறித்து தெரியப்படுத்தியதையடுத்து பெற்றோர் பாடசாலை அதிபர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை முறைப்பாடு தெரிவித்ததையடுத்து குறித்த கடை முதலாளியை கைது செய்தனர். 

இதேவேளை இதில் கைது செய்யப்பட் கடைமுதலாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.