மட்டக்களப்பு, புல்லுமலைப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலைக்கான நிர்மாணப் பணிகளை கைவிடப்போவதாக ரொமன்சியா லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான முகமட் ஜெசிம் தெரிவித்துள்ளார்.
மேலும் இனமத ரீதியிலான புரிதலில் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது. இரு இனங்களிலும் இன நல்லுறவினை வலுப்படுத்துவதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தலைமையில் செங்கலடியில் உள்ள செல்லம் திரையரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் பிரதிநிதிகள், சர்வமத அமைப்புக்கள், சிவில் ஒன்றிய நிறுவனங்கள் மற்றும் மட்டு.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட கணபதிப்பிள்ளை மோகன், இத் தொழிற்சாலையின் பணிகள் கைவிடப்பட்டது பிரதேச மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பு மற்றும் மக்களின் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றியாகும் என்றார்.
இக் குடிநீர் தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 மாதகாலமாக பிரதேச மக்கள் சமூக நல அமைப்புக்கள் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM