சிலாபம் கடலில் மீன்பிடிக்கச் சென்றவரின் வலையில் சிக்கிய டொல்பின் மீனை வெட்டிக் கொன்று உணவிற்காக விற்பனைக்கு கொண்டு செல்கையில் குறித்த நபர் மீனவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவனரால் கைது செய்யப்பட்டுள்ளார்இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் சிலாபம் கடற்கரையோரப் பகுதியில் வசிக்கும் மீனவர் ஆவார்.

சுமார் 25 கிலோ எடையுடைய வெட்டிய நிலையிலிருந்த டொல்பின் மீனும், மீன்பிடிக்காக பயன்படுத்தப்பட்ட படகும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாகவும் சந்தேகநபர் சிலாபம் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.