மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளைப் பிடிக்கும் அதிகாரம் பொலிஸாரிடம்.மீற்றர்மானி பொருத்தப்படாத முச்சக்கர வண்டிகளை, பிடித்து  நீதிமன்றங்களில்  ஒப்படைக்கும் உரிமையை, பொலிஸாருக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக  வீதி அபிவிருத்திக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள்,முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்பட்டுள்ள மீற்றர் மானிகளின் தரம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை, போக்குவரத்து  அமைச்சருக்கு வழங்கவுள்ளதாகவும், வீதி அபிவிருத்திக்கான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையை ஆராய்ந்ததன் பின்னர், இது  தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். 

அத்துடன், போக்குவரத்து  அமைச்சரின் பரிந்துரைக்கமைய, உரிய சட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு,பொலிஸாருக்கு அதிகாரத்தை வழங்கவுள்ளதாகவும், சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, பத்து  வருடங்களுக்குப்  பின்னர், இந்த வருடத்தில் வாகன விபத்துக்களினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் குறைவடைந்துள்ளதாகவும், சிசிர கோதாகொட மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.