அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 174.12 ரூபாவாக பதிவாகியுள்ளது. 

இதேவேளை, அண்மைக்காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.