(எம்.மனோசித்ரா)

சூட்சுமான முறையில் சட்டவிரோதமாக நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பண்டார நாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று  திங்கட்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் 52 வயதுடைய நுகேகொடையை சேர்ந்தவராவார்.

இவரிடமிருந்து 35, 015 அமெரிக்க டொலர்களும், 319 சிங்கப்பூர் டொலர்களும், 1100 யுரோ மற்றும் 25 ஆயிரம் உள்நாட்டு நாணயத்தாள்களும் சுங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த பெருமதி 64 இலட்சத்து 13 ஆயிரத்து 273 ரூபாவாகும். 

கணனி வன்பொருள் பகுதியொன்றில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கடத்த முற்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சுங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.