காணமல்போனோர் தொடர்பான மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களில் அமர்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்பிரகாரம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் மன்னார் மாவட்ட செலயகத்தில் 28ஆம் திகதியும் வவுனியா மாவட்ட செயலகத்தில் 29ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. அனைத்து அமர்வுகளும் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையில் இடம்பெறவுள்ளது. 

குறித்த அமர்வுகளின் போது சாட்சியமளிப்பவர்களுக்கான கடிதங்கள் மாவட்ட செயலகங்களின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய பகுதிகளில் இருந்து முறைப்பாட்டாளாகள் வருகை தருவதற்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

காணமல் போனோர் ஆணைக்குழுவிற்கான கால எல்லை பெப்ரவரி 15ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.