இலங்கையின் வாகன லீசிங் துறை தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ள Carmudi.lk

23 Nov, 2015 | 05:54 PM
image

இலங்கையின் முன்னணி ஒன்லைன் வாகன விற்பனை இணையத்தளமான Carmudi.lk, இலங்கையின் வாகன லீசிங் துறை தொடர்பான ஆழமான ஆய்வுகள் தொடர்பான விவரங்களை உள்ளடக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பெருமளவு கடந்த கால தரவுகளை ஆராய்ந்து, தயாரிக்கப்பட்ட Carmudi.lk இன் அறிக்கைக்கு, இலங்கையில் வாகன நிதி வழங்கல் என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த அறிக்கையின் மூலமாக, பெறுமதி வாய்ந்த உள்ளார்ந்த விவரங்கள் வழங்கப்படுவதுடன், வாகனத் துறையின் போக்கு, உறுதியான மொத்த தேசிய உற்பத்தி, குறைந்த செலவீனத்திலமைந்த கடன்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு மற்றும் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளின் அதிகரிப்பு போன்ற பாரிய பொருளாதார காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.  

இந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வில், Carmudi ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளர் ஃபிராஸ் மார்கார் கருத்து தெரிவிக்கையில், 

Carmudi இன் அறிக்கை வெளியீட்டுக்கான பின்புலக் காரணி மற்றும் இலங்கையின் வாகன விற்பனைத் துறை முகங்கொடுத்துள்ள பிரதான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார். 

“இன்றைய கால கட்டத்தில் இலங்கையில் வாகனங்களுக்கான கேள்வி குறிப்பிடத்தக்களவு அதிகரித்துக் காணப்படுகிறது. 

இந்த கேள்வியை கருத்தில் கொண்டு சகல தரப்பினருக்கும் அனுகூலம் வழங்கக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தல்கள் அமைந்திருப்பது தொடர்பில் விவாதிக்கப்படுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது”

“இதனடிப்படையில், இந்த அறிக்கை வெளியீட்டு என்பது, தற்காலத்துக்கு பொருத்தமானதாக அமைந்துள்ளதுடன், இலங்கையின் தற்போதைய வாகன சூழ் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் அமைந்துள்ளது. 

ஒழுங்குபடுத்தல் கொள்கை மற்றும் இதர கடுமையான விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான உரையாடல்களை ஏற்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும்” என்றார். 

Carmudi அறிக்கையின் பிரதான கண்டறிதல்களில், 2015 இல் புதிய வாகனப் பதிவுகளின் சடுதியான அதிகரிப்பு முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2015 ஆகஸ்ட் மாதத்தில் இது வரை பதிவாகிய சாதனைப் பெறுமதியாக 4990 வாகனங்கள் எனும் எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. 

சிறிய கார்கள், hybrid வகைகள் மற்றும் முழுமையான electric வாகனங்கள் போன்றன 2015 இல் இலங்கையர்கள் மத்தியில் அதிகளவு புகழ் பெற்றவையாக திகழ்கின்றன. 

இலங்கையின் இறக்குமதிக் கொள்கையில் காணப்பட்ட தளர்வுகள் இந்த நாட்டத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் சிறந்த அனுகூலத்தை பெற்றுக் கொள்ளும் வகையில் பெருமளவு கொள்வனவுகளை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்தியிருந்தனர். 

இந்த செயற்பாட்டுக்கமைய, இலங்கையின் பெருமளவான நுகர்வோர்கள், தமக்கு காணப்படும் மிகவும் சிக்கனமான நிதி திரட்டிக்கொள்ளும் வாய்ப்புகளை பயன்படுத்தி தமது வாகனத் தேவையை நிவர்த்தி செய்திருந்தனர்.

ஆனாலும், வாகனங்கள் மீது அறவிடப்படும் வரி முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் மற்றும் குறைந்து செல்லும் வட்டி வீதங்கள் மீதான மாற்றம் போன்றவற்றின் மூலமாக, வாகனங்கள் கொள்வனவு செய்வோருக்கு பெருமளவு தொகையை வாகனங்கள் மீது செலுத்த நேரிடுவதுடன், நிதிக் கம்பனிகள் மற்றும் வங்கிகளின் சூழ்நிலைகளிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக அமையும் என மார்கார் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

“வாகனங்களின் பெறுமதிகள் அண்மையில் அதிகரித்திருந்தமை சந்தையை பாதித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல்கள் வெளியாகியிருந்ததை தொடர்ந்து வாகன விற்பனைகள் சரிவடைந்துள்ளன. 

வட்டி வீதங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டாலும், அவை சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருத முடியாது” என்றார்.

“நாம் தொடர்ந்தும் சந்தையை அடுத்த சில மாதங்களுக்கு கண்காணிக்கவுள்ளதுடன், வாகன விநியோகஸ்த்தர்கள் வாகன கொள்வனவாளர்களின் நோக்கங்களை தெளிவாக அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். அடுத்த சில மாதங்களில் வாகனச் சந்தை மீண்டும் வழமைக்குத் திரும்பும் என நாம் எதிர்பார்க்கிறோம், வாகன விலைகள் மீண்டும் குறைந்த பெறுமதிகளை எய்தக்கூடும்” என மேலும் குறிப்பிட்டார்.

வாகனங்களை கொள்வனவு செய்யவும், விற்பனை செய்யவும் இணையத்தில் இலகுவாக பயன்படுத்தக்கூடிய கட்;டமைப்பாக Carmudi அமைந்துள்ளது. பாவனையாளர்களுக்கு துரிதமாகவும், இலகுவாகவும் தாம் விற்பனை செய்ய எதிர்பார்க்கும் வாகனங்கள் பற்றிய விளம்பரங்களை பதிவு செய்யக்கூடிய வசதிகளையும் வழங்குகிறது. 

இலங்கையின் வாகன கொள்வனவாளர்களுக்கு பல தெரிவுகளை பார்வையிடக்கூடிய வாய்ப்புகளையும் வழங்குகிறது. இலங்கையின் வாகன விற்பனைத் துறையில் புத்தாக்கமான பங்காளராக Carmudi.lk திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்